LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ் மாவட்ட கலாச்சாரப் பேரவை வருடாந்தம் வழங்கும் ‘செம்புலக் குரிசில்’ விருதை பெற்ற கனடா வாழ் எழுத்தாளரும் சமூகப் பணியாளருமான அருண் செல்லப்பா

Share

யாழ் மாவட்ட கலாச்சாரப் பேரவையினால் வருடாந்தம் வழங்கப்பெறும் ‘செம்புலக் குரிசில்’ விருதை வழங்கிக் கெளரவிக்கப்பெற்ற கனடா வாழ் எழுத்தாளரும் சமூகப் பணியாளருமான அருண் செல்லப்பா அவர்களுக்கு கனடாவிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன “செம்புலக் குரிசில்” விருது என்பது யாழ் மாவட்ட கலாசாரப் பேரவையினால் தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டுத் துறை சார்ந்த சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு சிறப்புக் கெளரவ விருதாகும். கடந்த பல வருடங்களாக வழங்கிக் கௌரவிக்கப்பெறும் வாய்ப்பை பலர் பெற்று மகிழ்ந்திருக்கின்றார்கள்

இந்த வகையில் கனடா வாழ் எழுத்தாளரும் சமூகப் பணியாளரும் முன்னாள் வர்த்தகத்துறை வெற்றியாளருமான அருண் செல்லப்பா அவர்கள் எழுதிய நான்கு நாவல்களுக்குமாக இன்று “செம்புலக் குரிசில்” விருது, யாழ் மாவட்ட கலாசாரப் பிரிவினரால் வைபவ ரீதியாக அவருக்கு வழங்கப்பெற்றது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் யாழ்ப்பாணத்தில் வாழும் பத்துக்கு மேற்பட்ட வெற்றியாளர்களோடு கனடாவில் வாழ்ந்தாலும் தாயகத்திலும் சமூகப் பணிகளிலும் ஈடுபாடு கொண்ட அவருக்கு இந்த கௌரவம் கிட்டியுள்ளது

“செம்புலக் குரிசில்” விருதானது சொந்த மண்ணில் , பண்பாட்டுத் துறை அவரது எழுத்திற்குத் தரும் மிக உயர்ந்த அங்கீகாரம் என்றும் அவரது படைப்புக்கள் தந்த தாய் மண் சுகந்தமே அவரது படைப்புக்களுக்கு விருதுகளைப் பெற்றுக் கொடுத்துள்ளது என யாழ்ப்பாணத்திலிருந்து உதயன் செய்தியாளர் அறிவித்துள்ளார்.