LOADING

Type to search

சினிமா

ஸ்பைடர்மேன் 4 நாளில் ரூ.8,800 கோடி வசூலித்துள்ளது

Share

ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ திரைப்படம் வெளியான நான்கு நாட்களிலேயே உலகளவில் ரூ.8,846 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம் சினிமா வரலாற்றிலேயே வெளியான முதல் வாரத்திலேயே அதிக வசூல்பெற்ற இரண்டாவது படம் என்ற சாதனையை படைத்துள்ளது. அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக 2-வது மிகப்பெரிய உலகளாவிய ஓப்பனிங் பெற்ற திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தியாவில் ஜூலை.30ம் தேதி வெளியானநிலையில், நேற்றுவரை மட்டும் ரூ.306.37 கோடி வசூல் செய்துள்ளது. இங்கு ஆங்கில பதிப்பு முதலிடத்தில் இருந்தாலும், இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்ட பதிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் வேறு படங்கள் எதுவும் பெரிதாக வெளியாக நிலையில், விடுமுறை நாட்களில் (சனி, ஞாயிறு) நல்ல வசூலை குவித்துள்ளது. டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இயக்கியுள்ள இப்படத்தில், டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டாயா முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ படத்தின் தொடர்ச்சியாக, தனது அடையாளத்தை அனைவரும் மறந்த பிறகு பீட்டர் பார்க்கர் எதிர்கொள்ளும் புதிய சவால்களை இக்கதை விவரிக்கிறது.

ஸ்பைடர்மேன் திரைப்படங்களுக்கு எப்போதும் இந்திய ரசிகர்களிடம் இருக்கும் தனி வரவேற்பே இந்த பிரம்மாண்ட வசூலுக்கு முக்கியக் காரணம் எனத் திரையரங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.