LOADING

Type to search

சினிமா

உக்ரைன் மீது ரஷியா சரமாரி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்

Share

உக்ரைன் மீது ரஷியா சரமாரி தாக்குதலில்15 பேர் உயிரிழந்தனர். உக்ரைன், ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்டார். ஆனால் முயற்சி தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா நேற்று நள்ளிரவு சரமாரியாக ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. தலைநகர் கீவ் உள்பட உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், 27 பேர் படுகாயமடைந்தனர்.