LOADING

Type to search

கனடா அரசியல்

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘நூல்களின் சங்கமம்-2026 கண்காட்சியில் தாயக எழுத்தாளர் தீபச்செல்வனின் ‘சைனைட்’ நாவல் வெளியீடு!

Share

கடந்த 16-08-2026 அன்று ஞாயிற்றுக்கிழமை. ஒன்றாரியோ தமிழிசைக் கலா மன்ற மண்டபத்தில் நடைபெற்ற கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘நூல்களின் சங்கமம்-2026- கண்காட்சியில் தாயக எழுத்தாளர் தீபச்செல்வனின் ‘சைனைட்’ நாவல் வெளியீடு செய்யப்பெற்றது.

இந்த வெளியீட்டு வைபவத்தின் மூலம் கனடாவில் ரொறன்ரொ பெரும்பாகத்தில் இரண்டாவது தடவை வெளியிடப்பெற்ற ஈழத்து போர் இலக்கிய நூல் என்ற பெருமையை ‘சயனைட்’ நாவல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நூல்களின் சங்கமம்-2026 கண்காட்சியானது கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவராக விளங்கும் க. ரவீந்திரநாதன் தலைமையில் இயங்கிய இயக்குனர் சபை உறுப்பினர்கள் பலரின் ஒழுங்கமைப்பட்டட திட்டத்தின் பிரகாரம் வெற்றிகரமாக நடைபெற்றது என்றால் அது மிகையாகாது. அங்கு மேலும் பல எழுத்தாளர்களின் நூல்களும் வெளியிடப்பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாயக எழுத்தாளர் தீபச்செல்வனின் ‘சைனைட்’ நாவல் வெளியீட்டை அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவர் கனடா வாழ் நிமால் விநாயகமூர்த்தி மற்றும் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தற்போதைய துணைச் செயலாளருமான லோகேந்திரலிங்கம் ஆகியோரின் இணைந்த ஏற்பாட்டில் அரங்கேறியது.

நூல் விமர்சனத்தை இலங்கை ‘வீரகேசரி’ பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் வி. தேவராஜ் அவர்களும் வெளியீட்டு நிகழ்வை எஸ்.ஜெயானந்தசோதி அவர்களும் வழங்கினார்கள்.

அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி மற்றும் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் ஆகியோரும் அங்கு உரையாற்றினார்கள்.

எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் என பல அன்பர்கள் ‘சைனைட்’ பிரதிகளை நிமால் விநாயகமூர்த்தி அவர்களிடமிருந்து பெ ற்றுக் கொண்டனர்