LOADING

Type to search

உலக அரசியல்

அமெரிக்காவின் பொருளாதார தடையால் கியூபாவுக்கு ரூ.68 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது

Share

அமெரிக்காவின் பொருளாதார தடையால் கியூபாவுக்கு ரூ.68 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கியூபா நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக பொருளாதார மற்றும் வர்த்தகப் போர் நீடித்து வருகிறது. கியூபா அரசை வீழ்த்தும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு, கியூபா மீது கடுமையான எண்ணெய் மற்றும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இதனால் கியூபாவில் வரலாறு காணாத மின்சாரப் பற்றாக் குறை ஏற்பட்டு, மக்கள் அன்றாடம் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவுடன் எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தையும் தற்போது நடைபெறவில்லை என்று கியூபா வெளியுறவுத்துறை அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.  அமெரிக்காவின் இந்த அராஜகப் பொருளாதாரத் தடையால் கடந்த ஓராண்டில் மட்டும் கியூபாவுக்கு சுமார் ரூ.68 ஆயிரம் கோடி (8.1 பில்லியன் டாலர்) பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.