LOADING

Type to search

சினிமா

நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி காலமானார்

Share

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி (வயது 72) காலமானார். தமிழ் திரைத்துறையின் அடையாளங்களில் ஒருவராக திகழ்ந்தவர் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன். இவருக்கு ராம்குமார், பிரபு ஆகிய இரு மகன்களும், சாந்தி, தேன்மொழி ஆகிய இரு மகள்களும் இருந்தனர். சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி. இருவருக்கு சத்தியலட்சுமி என்ற மகள் உள்ளார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாந்தி உயிரிழந்தார். சென்னை அண்ணா சாலையில் சிவாஜிகணேசன் தனது மகள் பெயரில்தான் சாந்தி திரையரங்கை கட்டி இருந்தார். இந்த திரையரங்கில் பல்வேறு வெற்றி படங்கள் திரையிடப்பட்டும் உள்ளது. சென்னை அண்ணா சாலையில் முக்கிய அடையாளமாக சாந்தி திரையரங்கு பெயர் பெற்று இருந்தது.  சாந்தி மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.