LOADING

Type to search

இந்திய அரசியல்

பீகாரில் குளத்தில் மூழ்கி சிறுவர்-சிறுமியர் 6 பேர் உயிரிழந்தனர்

Share

பீகாரில் குளத்தில் மூழ்கி சிறுவர்-சிறுமியர் 6 பேர் உயிரிழந்தனர். பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் தரிடா பகியர் கிராமத்தை சேர்ந்த சிறுவர் – சிறுமியர் 6 பேர் (பூஜா குமாரி (வயது 13), ராகுல் குமார் (வயது 14), விகாஷ் குமார் (வயது 13), ஆயூஷ் குமார் (வயது 12), மீனாட்சி குமாரி (வயது 12), ஜோதி குமாரி (வயது 14)) காலை கிராமத்திற்கு அருகே உள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர்.

அனைவரும் குளித்துக்கொண்டிருந்தபோது ஒரு சிறுமி குளத்தில் மூழ்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சக சிறுவர், சிறுமியர் அந்த சிறுமியை மீட்க முயற்சித்தனர். அப்போது, 3 சிறுமிகள், 3 சிறுவர்கள் என 6 பேரும் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். குளிக்கச்சென்ற சிறுவர், சிறுமியர் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் குளத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு சிறுவர், சிறுமியர் 6 பேரும் சடலமாக கிடந்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல்துறை, விரைந்து சென்று சிறுவர், சிறுமியரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.