LOADING

Type to search

உலக அரசியல்

அமெரிக்கா, கிரீன்லாந்து, டென்மார்க் இடையே முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது

Share

அமெரிக்கா, கிரீன்லாந்து, டென்மார்க் இடையே முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக டிரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததால், சர்வதேச அளவில் பெரும் சர்ச்சை நிலவி வந்தது. நேட்டோ அமைப்பில் நட்பு நாடாக இருக்கும் டென்மார்க்குக்கு சொந்தமான இந்த தீவை அமெரிக்கா ஆக்கிரமித்துவிடுமோ என்ற அச்சமும் நீடித்தது. இந்நிலையில் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, அமெரிக்கா, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து ஆகிய நாடுகள் இடையே வரலாற்று சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டென்மார்க் பிரதமர் மெட்டே பிரட்ரிக்சன் மற்றும் கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-பிரட்ரிக் நீல்சன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி, கிரீன்லாந்தில் அமெரிக்கா தனது ராணுவ தளங்களை விரிவுபடுத்தவும், நவீனப்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.