LOADING

Type to search

சினிமா

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்கே27’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

Share

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்கே27’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தமிழ் திரையுலகில் பல தசாப்தங்களாகத் தரமான திரைப்படங்களை வழங்கி வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ், தங்களின் அடுத்த பிரம்மாண்ட படைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் அவரது 27-வது திரைப்படத்தின் (எஸ்கே27) அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதாகை வெளியாகி, படப்பிடிப்புப் பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன. டி.ஜி. தியாகராஜன் வழங்கும் இப்படத்தைச் செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் மற்றும் சாய் சித்தார்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். ‘பார்க்கிங்’ திரைப்படத்தின் மூலம் எளிமையான கதையை விறுவிறுப்பான திரைக்கதையாக்கி ரசிகர்களின் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். சிவகார்த்திகேயன் – ராம் குமார் இணையும் முதல் படம் இதுவாகும். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கயாடு லோகர் நடிக்கிறார். இந்த புதிய ஜோடி திரையில் தோன்றுவது இதுவே முதன்முறை. ‘பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் மற்றும் மூத்த நடிகர் ஜார்ஜ் மரியான் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.