கவுரி கிஷன் நடிக்கும் “தாரகை” படத்தின் காணொளி வெளியானது
Share
கவுரி கிஷன் நடிக்கும் “தாரகை” படத்தின் காணொளி வெளியானது. “ஒரு பெண்ணின் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், பயணம், உறவுகள், வாழ்க்கைத் தேர்வுகள் மற்றும் சுதந்திரம் குறித்த கேள்விகளை முன்வைக்கும். ஒரு பயணம், ஒரு தேடல், பல பெண்களின் பாதைகள்தான் இதன் கதை” என்று படக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், இன்று ‘தாரகை’ படத்தின் புரோமோ காணொளி வெளியிடப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டுள்ள புரோமோ காணொளியில், “என்று ஒரு பெண் இரவில் சாலைகளில் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடுகிறாளோ, அன்றுதான் இந்தியாவில் உண்மையான சுதந்திரம் தினம்” என்பதோடு தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து, நள்ளிரவில் மணப்பெண் கோலத்தில் கவுரி கிஷன், சென்னைக்குச் செல்லும் பேருந்தில் ஏறுவதைக் காண்கிறோம். சென்னைக்கு இன்னும் 96 கி.மீ. தூரம் உள்ளது என்பதை ஒரு மைல்கல் தெரிவிக்கிறது. இசை என்ற கதாபாத்திரத்தில் கவுரி கிஷன் நடித்துள்ளார். ‘தாரகை’ திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைக்கிறார். தற்போது வெளியாகியுள்ள இந்த புரோமோ காணொளி படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. தனித்துவமான நடிப்புத் திறமையால் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள கவுரி கிஷன், இந்த ஆழமான எமோஷனல் பயணத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு நகர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் முன்னோட்டம் விரைவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.















