3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது
Share
3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டுக்கான நோபல் பரிசை அறிவிக்கும் நிகழ்வு இன்று தொடங்கியுள்ளது. 50 உறுப்பினர்களை கொண்ட நோபல் அமைப்பு ஆனது, பரிசுக்கு முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை அறிவிக்கும். வாழ்க்கை அறிவியல் அல்லது மருத்துவ துறையில் அரும்பெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த பரிசு வழங்கப்படுகிறது. இதன்படி, முதலில் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்படுகிறது. நாளை இயற்பியலுக்கான நோபல் பரிசும், நாளை மறுநாள் வேதியியலுக்கான நோபல் பரிசும், 8-ந்தேதி இலக்கியத்துக்கான நோபல் பரிசும், 9-ந்தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 12-ந்தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளன. இதனை முன்னிட்டு, சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள கரோலின்ஸ்கா மையத்தில் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு கார்ல் டீஸ்செரோத், பீட்டர் ஹெகமன் மற்றும் ஜார்ஜ் நாகல் ஆகிய 3 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, அயனிகளின் செயல்பாடுகள் மற்றும் ஒளியியல் மரபணுவியல் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. தனிப்பட்ட நரம்பு செல்களின் செயல்பாடுகளை மூளை எப்படி கட்டுப்படுத்துகிறது என்பது தொடர்பான விசயங்களில் அவர்கள் 3 பேரும் பணியாற்றி உள்ளனர். இந்த மூளை தொடர்பான மர்மங்களை தெரியப்படுத்துவதற்காக, இவர்களுடைய பரிசோதனை முறைகள் உலகம் முழுவதும் உள்ள ஆய்வகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த 3 பேரில் கார்ல் அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர். மற்ற இருவரும் ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். இதனை நோபல் பரிசுக்கான அமைப்பின் மருத்துவ குழுவுக்கான செயலாளர் தாமஸ் பெர்ல்மேன் அறிவித்துள்ளார். இதில், 24 காரட் தங்கத்துடன் கூடிய பதக்கம், பட்டயம் மற்றும் மொத்தம் ரூ.11.44 கோடி அளவிலான பரிசுத்தொகையும் வழங்கப்படும். இந்த நோபல் பரிசு முறைப்படி வருகிற டிசம்பரில் வழங்கப்படும்.















