LOADING

Type to search

சினிமா

யோகிபாபு நடிக்கும் ‘சிங்காரம்’ படம் அக்டோபர் 30ந் தேதி வெளியாகிறது

Share

கே.வி கதிர்வேலு இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் ‘சிங்காரம்’ திரைப்படம் அக்டோபர் 30ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. நகைச்சுவை கதாபாத்திரங்கள் மட்டுமின்றி கதாநாயகனாகவும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். ‘ஜெயிலர் 2’, ‘முக்குத்தி அம்மன் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், ‘ஆன் ஆர்டினரி மேன்’ திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது கே.வி. கதிர்வேலு இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள திரைப்படம் ‘சிங்காரம்’. இப்படத்தில் சார்லி, ரெடின் கிங்ஸ்லி, ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரு சாமானியனின் உத்வேகம் அளிக்கும் பயணத்தையும், அவனது வாழ்க்கையை மாற்றும் சம்பவங்களையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. ரமண பாலாஜி மற்றும் பத்மாவதி காந்தி ஆகியோர் ‘ராக் புரொடக்சன்ஸ்’ நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்நிலையில் ‘சிங்காரம்’ திரைப்படம் அக்டோபர் 30-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.