LOADING

Type to search

சினிமா

“பாரிஸ் கஃபே” படம் அக்டோபர் 9ந் தேதி அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளது

Share

“பாரிஸ் கஃபே” படம் அக்டோபர் 9ந் தேதி அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோள், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைபடம் ‘பாரிஸ் கஃபே’. எல்வி என்டர்டெயின்மென்ட் சார்பில் கண்மணி ரங்கநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார். காதல் மற்றும் திகில் அம்சங்களை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் கடந்த செப்டம்பரில் வெளியானது. ஒரு நேர்மையான மருத்துவர் சமூகப் பிரச்சனைக்காக அரசியல் அழுத்தங்களை எதிர்கொண்டால் என்ன செய்வார் என்பதை மையப்படுத்தி ‘பாரிஸ் கஃபே’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்துக்கு கே இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த அழகழகாய் மனம், தேன் பொழுதுகளே ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. இந்த நிலையில், ‘பாரிஸ் கஃபே’ திரைப்படம் அக்டோபர் 9 ஆம் தேதி அமேசான் பிரைம், ஆஹா மற்றும் சிம்பிளி சவுத் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளது.