LOADING

Type to search

இந்திய அரசியல்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் அபார வெற்றி பெற்றது

Share

தாராபுரம், மதுராந்தகம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றது. மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் வெற்றி பெற்றுள்ளனர். இரு தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர். மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்ளிட்ட 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்தத் தொகுதியில் மொத்தம் 2,13,788 வாக்காளர்கள் உள்ள நிலையில், 1,84,413 பேர் வாக்களித்தனர். இதன் மூலம் 86.26 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் 21 சுற்றுகளாக எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் 72,103 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன் 51,801 வாக்குகள் பெற்றார். இதனால் மரகதம் குமரவேல் 20,302 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் கணிதா சம்பத் 46,034 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி 2,083 வாக்குகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1,506 வாக்குகளையும் பெற்றன. தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் த.வெ.க. சார்பில் சத்யபாமா, தி.மு.க. சார்பில் சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்தத் தொகுதியில் மொத்தம் 2,23,306 வாக்காளர்களில் 1,79,314 பேர் வாக்களித்தனர். இதன் மூலம் 80.30 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் 23 சுற்றுகளாக எண்ணப்பட்டன. தாராபுரம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா 66841 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. வேட்பாளர் சுகன்யா 57370 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் சத்யபாமா 9471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி 45280 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி 5268 வாக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1157 வாக்குகளையும் பெற்றன. மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் த.வெ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.