LOADING

Type to search

இலங்கை அரசியல்

சப்ரகமுவ மாகாண தனியார் பஸ் வண்டி உரிமையாளர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி!

Share

(15-10-2021)

சப்ரகமுவ மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கீழ் இயங்கும் தனியார் பஸ் வண்டி உரிமையாளர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி அன்பளிப்பு செய்யப்பட்டது.

மேற்படி கொடுப்பணவுக்கான வவுச்சர் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் நேற்று முன்தினம்(13) சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, போக்கவருத்து அமைச்சர் பவித்ரா வண்ணியாராச்சி, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, சப்ரகமவ மாகாண சபை தலைவர் கஞ்சன ஜயரத்ன, சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் ரஞ்ஜனி ஜயகொடி,சப்ரகமுவ மாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ரம்யகுமார வீரசிங்க உட்பட அதிகாரிகளும் கலந்த கொண்டனர்