LOADING

Type to search

இலங்கை அரசியல்

கிண்ணியா படகு விபத்து சம்பவம் ; 3 பேர் கைது

Share

திருகோணமலை, கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் நீரில் மூழ்கி மிதப்பு பாலம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்புப் பாலத்தை இயக்கியவர், அதன் உரிமையாளர் மற்றும் அப்போது படகில் இருந்து பயணிகளிடம் பணம் அறவிட்ட நபர் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறிஞ்சாக்கேணியில் நேற்று குறித்த மிதப்புப் பாலம் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.