LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை:- 14 பேர் மரணங்கள், ஒருவரை காணவில்லை

Share

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் 9 மாவட்டங்களில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒரு இலட்சம் குடும்பங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, புத்தளம், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய , 22 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவரை காணவில்லை.

452 வீடுகள் பகுதியளவிலும் 56 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

30 குடும்பங்களைச் சேர்ந்த 114 பேர் ஆறு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

புத்தளத்தில் 7 பேரும் , அம்பாந்தோட்டையில் ஒருவரும் மற்றும் திருகோணமலையில் 6 பேரும் மேற்படி உயிரிழந்துள்ளனர்.