LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பால்மாவின் புதிய விலை அறிவிப்பு!

Share

(30-12-2021)

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது.

ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 150 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலை 60 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 1 கிலோ பால்மா பக்கெற்றின் திருத்தப்பட்ட விலை ரூ.1,345 ஆகவும், 400 கிராம் பக்கெற் ஒன்றின் விலை ரூ.540 ஆகவும் உயரவுள்ளன.

உலகச் சந்தையில் பால்மாவின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதால், தற்போதைய விலையில் தொடர்ந்து பால்மாவை வழங்க முடியாது என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.