LOADING

Type to search

சினிமா

விஜயை வைத்து கைதி-2 படம் எடுக்க திட்டம் தீட்டும் லோகேஷ் கனகராஜ்

Share

தளபதி விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துவிட்டார். இத்திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கவில்லை. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தை தில் ராஜு தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாரிக்க உள்ளார். ஏப்ரல் மாதம் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது. இப்படத்தையடுத்து விஜய் மீண்டும் மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தனது 67வது திரைப்படத்தை துவக்க திட்டமிட்டுள்ளாராம். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் திரைப்படம் போல இருக்கும் என கூறப்படுகிறது.

முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் ஒரு தகவலாக இந்த படத்தில் விஜய்க்கு கதாநாயகி கிடையாதாம். மேலும், இப்படத்தில் பாடல்களும் இருக்காதாம். இதை கேட்கும்போது ஒருவேளை விஜய்யை வைத்து கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை விஜயை வைத்து எடுக்க திட்டமிட்டுள்ளாரா என்று ரசிகர்கள் இணையத்தில் கேட்டு வருகின்றனர். இதற்கு இடையில் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் லொகேஷன் கனகராஜ் திட்டமிட்டுள்ளாராம். கமல்ஹாசனின் விக்ரம் பட பிடிப்பு

முடிந்த பிறகு கைதி படத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கும் எனவும் கூறப்படுகிறது. அடுத்தடுத்த பதிவேற்றங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.