அஜித் 62 படத்தை இயக்குகிறார் விக்னேஷ் சிவன்
Share
தமிழ் திரையுலகில் ரஜினி, விஜய்க்கு பின் மாஸ் ஹீரோ இடத்தில் இருப்பவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில் கடந்த மாதம் வலிமை திரைப்படம் வெளியானது.
இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். போனிகபூர் தயாரித்திருந்தார். இது அஜித்தின் 60வது திரைப்படமாகும். இப்படத்தில் அசத்தலான பைக் சேஸிங் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
இப்படத்திற்கு பின் மீண்டும் போனிகபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கும் புதிய படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இது அஜித்தின் 61வது திரைப்படமாகும். இப்படத்தில் பில்லா மற்றும் மங்காத்தா படத்தில் வந்தது போல் வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளார் அஜித். மேலும், கதாநாயகன் வேடத்திலும் அஜித் என இரட்டை வேடம் எனக்கூறப்படுகிறது.
வில்லன் வேடத்தில் வரும் அஜித்துக்கு அசத்தலான காட்சிகள் இருக்கிறதாம். மணி ஹீஸ்ட் வெப் சீரியஸ் போல, மிகவும் திறமையாக திட்டமிட்டு வங்கி கொள்ளைகளில் ஈடுபடும் வேடத்தில் அஜித் நடிக்கவுள்ளாராம்.
இந்நிலையில், இப்படத்திற்கு பின் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தை நயன்தாராவின் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
மேலும், இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் துவங்கவுள்ளது. அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனக்கூறப்படுகிறது.
விக்னேஷ் சிவன் ஏற்கனவே போடா போடி, நானும் ரவுடிதான் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்ளை இயக்கியுள்ளார். மேலும், வலிமை படத்தில் 2 பாடல்களை அவர் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது













