LOADING

Type to search

சினிமா

சில கதாநாயர்களை என்கிட்ட இருந்து பிரிச்சிட்டாங்கனெ குறை கூறூகிறார் வடிவேலு

Share

நீண்ட வருடங்களாக நடிக்காமல் இருந்த வடிவேலு இப்பொழுது மீண்டும் திரையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் மூலம் திரும்ப வருகிறார். முன்னணி நகைச்சுவையாளராக மட்டுமல்லாமல் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்த வடிவேலுக்கு மக்கள் பெரும் ஆதரவை அளித்தனர். இந்த நிலையில் சில கதாநாயர்களை என்கிட்ட இருந்து பிரித்துவிட்டனர் என வடிவேலு வெளிப்படையாக கூறியுள்ளார் .

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத முன்னணி நகைச்சுவையாளராக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் வடிவேலுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். தனது அசத்தலான நகைச்சுவை மூலம் பாடி லாங்குவேஜால் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த வடிவேலு கடந்த சில வாரங்களாகவே படங்களில் சரிவர நடிக்காமல் கண்ணீரில் மூழ்கி இருந்தார். பல்வேறு காரணங்களால் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலுவை அனைவரும் மீண்டும் திரையில் காண வேண்டும் என ஆசைப்பட்டனர்

. மெர்சல்,கத்தி சண்டை, என ஒரு சில படங்களில் நடித்து வந்தாலும் தொடர்ந்து வாய்ப்புகள் வடிவேலுவுக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் இப்பொழுது மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளார் வடிவேலு. இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

முழுக்க முழுக்க காமெடி கதை களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் கதாநாயகியே இல்லாமல் வடிவேலு மட்டும் வடிவேலுவுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வருகிறது. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் முன்னோட்டக் காட்சி சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்திலும் வடிவேலு காமெடியனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

எனவே வடிவேலுவை மீண்டும் திரையில் பார்க்க போகிறோம் என்ற சந்தோசத்தில் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ள நிலையில் தன்னிடம் இருந்து சில ஹீரோக்களை சிலர் பிரித்து விட்டதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஒரு படத்தில் நகைச்சுவை வெற்றி பெற வேண்டுமென்றால் நகைச்சுவையாளனுக்கும் கதாநாயகனுக்கும் நேரம் மிக நன்றாகவே இருக்க வேண்டும். அந்த வகையில் வடிவேலுவுக்கும் கதாநாயகர்களுக்கும் நேரம் நன்றாக கூடி வரும். நகைச்சுவை

என வந்துவிட்டால் யாராக இருந்தாலும் ஒருமையில் பேசித்தான் ஆக வேண்டும் அப்போதுதான் ரசிகர்கள் பார்க்கும்பொழுது எதார்த்தமாக தோணும். எனவே வடிவேலுவும் பல முன்னணி கதாநாயர்களுடன் இணைந்து நடித்து இருந்தாலும் அவர்களை படங்களில் ஒருமையில் பேசியும் திட்டியும் கலாய்த்தும் நடித்து நகைச்சுவை செய்து வந்தார்.

இதே போலத்தான் பிரண்ட்ஸ் படத்திலும் விஜய், சூர்யா என முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து இருந்தது மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் அவ்வாறு பேசி நடிக்கும் பொழுது ஒரு சில கதாநாயகர்கள்டம் ” நீங்க ஒரு ஹீரோ சார் அவர் காமெடியன் உங்களை போய் வாடா போடான்னு திட்டுகிறார் எனக்கூறி என்னிடமிருந்து சில கதாநாயகர்களை என்னிடமிருந்து பிரித்து விட்டார்கள் என வடிவேலு பேசியுள்ளார். வடிவேலு பேசியதை பார்த்து சில வலைதள வாசிகள் அவர் நடிகர் அஜித்துக்கும் தனக்கும் ராஜா படத்தில் நடந்த நிகழ்வை தான் குறிப்பிடுகிறார் என எண்ணுகின்றனர்.