LOADING

Type to search

சினிமா

பாலா படத்திற்கு 25 நாட்கள் ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் சூர்யா

Share

நடிகர் சூர்யா – பாலா கூட்டணியில் சூர்யா41 படத்தின் படபிடிப்பு துவங்கியுள்ளது. குமரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் படபிடிப்பு துவங்கப்பட்டது. இந்தப் படத்தை சூர்யாவே தனது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக தயாரித்து வருகிறார். கடந்த 18 ஆண்டுகளுக்கு பின்பு இந்தப் படத்தின் மூலம் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. படத்தில் சூர்யாவிற்கு கீர்த்தி ஷெட்டி ஜோடியாகியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் அவர் தமிழில் தனது அறிமுகத்தை செய்துள்ளார்.

மேலும் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்திற்காக சூர்யா, தொடர்ந்து 25 நாட்கள் நடிக்க ஒப்பந்தம் கொடுத்துள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரியில் ஒரே கட்டமாக படபிடிப்பு நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வெற்றிமாறனின் வாடிவாசல் படபிடிப்பில் கலந்துக் கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வாடிவாசல் படபிடிப்பு நடத்தப்பட்ட நிலையில் படம் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சூரி நடிப்பில் விடுதலை படத்தை இயக்கிவரும் வெற்றிமாறன், அடுத்ததாக சூர்யாவை இயக்கவுள்ளார். பாலா படத்தின் படபிடிப்பை முடித்துக்கொண்டு சூர்யா இந்தப் படத்தில் இணைகிறார்.