நடிகர் சந்தானத்தின் அடுத்த படத்தை எம்.ராஜேஷ் இயக்குகிறார்
Share
நடிகர் சந்தானம் தற்போது டிக்கிலோனா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மேயாத மான் திரைப்படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் “குளுகுளு”என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து பின்னணிக் குரல் பதிவு
பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் சந்தானம் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, சந்தானத்தின் அடுத்த படத்தை சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் ஆகிய படங்களை இயக்கிய எம் ராஜேஷ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எம் ராஜேஷ் இயக்கும் படங்களில் இதுவரை சந்தானம் 5 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். சந்தானம் எம்.ராஜேஷ் இணையும் இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவையாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.













