LOADING

Type to search

சினிமா

“அந்த நடிகையை தூக்கிட்டு வாங்க திலீப்..” கணவனை விட்டே கடத்த சொன்ன காவ்யா மாதவன்

Share

நடிகை காவ்யா மாதவன் தன்னுடைய கணவர் திலீப்பை விட்டு ஒரு நடிகையை கடத்தி வர சொன்ன ஆடியோ ஆதாரம் வெளியாகி பரபரப்பையுண்டு பண்ணியுள்ளது. கேரளாவில் பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீபின் மனைவி நடிகை காவ்யா மாதவனுக்கு தொடர்பு உள்ளது என்பதை குறிக்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. மலையாளம், தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை ஒருவர், 2017ல் காரில் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார்.

இது தொடர்பாக பிரபல மலையாள நடிகர் திலீப் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த வழக்கில் சில ‘ஆடியோ’ ஆதாரங்கள் வெளியாகின. அதன் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தினர்.அதில் ஒரு ஆடியோவில், நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில், திலீப் மனைவியான, நடிகை காவ்யாவுக்கு முக்கிய தொடர்பு இருப்பதாகவும், மனைவிக்காக அந்தப் பழியை திலீப் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.அந்த ஆடியோக்கள் மூலம், பாலியல் அத்துமீறல் சம்பவத்தில் நடிகை காவ்யா மாதவனின் தூண்டுதல் இருப்பது அம்பலமாகி உள்ளது.

2017ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த வழக்கில் 10 பேர் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், 7 பேரை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.