LOADING

Type to search

சினிமா

நடிகர் விஷால் மதம் மாறினாரா? அவரின் பதிவால் ரசிகர்களிடையே குழப்பம்

Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், மதம் மாறினாரா என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகர் விஷால், ‘வீரமே வாகை சூடும்’படத்திற்குப் பிறகு, ‘லத்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் வினோத் இயக்கி வரும் இப்படத்தில், விஷால் போலீசாக நடிக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதற்கிடையே, அண்மையில் நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவுக்கு குழந்தை பிறந்தது. இந்த தகவலை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். அதில், “மீண்டும் மாமா ஆனதில் மிக்க மகிழ்ச்சி. இதுக்கு மேல என்ன வேணும்?.

எனது தங்கை ஐஸ்வர்யாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையும், பெற்றோரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும். இன்ஷா அல்லாஹ்” என பதிவிட்டிருந்தார். விஷாலின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும், அவர் மதம் மாறிவிட்டாரா? என்று குழம்பி வருகிறார்கள்.