LOADING

Type to search

சினிமா

மே 6இல் திரையரங்கில் வெளியாகிறது ‘வாய்தா’

Share

நடிகர் நாசர், புதுமுக நடிகர் புகழ் மகேந்திரன் நடித்துள்ள வாய்தா திரைப்படம் மே 6ஆம் தேதி வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது. தயாரிப்பாளர் கே.வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் மகிவர்மன் இயக்கியுள்ள திரைப்படம் வாய்தா. குறிப்பிட்ட சமூகமொன்றின் அதிகாரப் பிரதிநிதித்துவம், அந்த சமூகத்தின் மீதான ஒடுக்குமுறை குறித்து பேசும் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு இணையாக நடிகை ஜெசிகா நடித்துள்ளார். இதுதவிர பிரபல நடிகர் நாசர், நாடக நடிகர் மு.ராமசாமி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தத் திரைப்படம் மே 6ஆம் தேதி வெளியாவதாக படக்குழு வியாழக்கிழமை அறிவித்தது.