LOADING

Type to search

அரசியல்

மூத்த குடிமக்களுக்கு ஆதரவளிக்க பிரம்ப்ரன் நகர சபை நிர்வாகம் புதிய ஒரு இணையவழி தகவல் குறிப்பேட்டை அறிமுகம் செய்கிறது

Share

ப்ராம்ப்ட்ட ன், ON (ஏப்ரல் 21, 2022) – ப்ராம்ப்ட்ட ன் நகர மக்களின் வயதிற்கு ஏற்றபடியான தொலைநோக்குப்பார்வைக்கு மேலும் உதவும் வகையிலும், மற்றும் சமுதாயத்தினருடனான உறவுகளை வலுப்படுத்தவும் புதிய ஒரு ஆன்லைன் ஆதார வளத்தினை ப்ராம்ப்ட்ட ன் நகர நிர்வாகம் துவக்கியது. இந்த மூத்த குடிமக்களுக்கான புதிய ஆன்லைன் அகரவரிசை பெயர்ப்புத்தகமானது (சுருக்கமாக கோர்வைப் புத்தகம்), மூத்த குடிமக்களுக்கான ஆதரவு தேடும் வகையிலான அகரவரிசை பெயர்ப் புத்தகமானது, மூத்த குடிமக்கள் மற்றும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்குக் கிடைக்கும் ஆதாரவளங்கள் மற்றும் சேவைகள் என்னென்னவென எளிதில் தெரிந்து கொள்வதற்கான ஒரு ஆன்லைன் கருவியாகும்.

இந்த அகரவரிசைப் பெயர்ப் புத்தகத்தில் கிடைக்கும் சில விஷயங்கள்:

• வீடு மற்றும் சமூகத்திற்கான ஆதரவுகள்
• போக்குவரத்து |
• ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு
• நிதி மற்றும் அதை அடைவதற்கான வழிகள்
• மன நலம் புதிதாக வருவோர்க்கான ஆதரவுகள்

மார்ச் 2021 இல், ப்ராம்ப்ட்ட ன் நகரமானது, அவரவர் வயதுக்கு ஏற்ற விதமான “நகரங்கள் மற்றும் சமூகங்களுக்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) உலகளாவிய நெட்வொர்க்கில்” உறுப்பினரானது.

நெட்வொர்க்கின் உறுப்பினர்கள் WHO அமைப்பின் வயதுக்கு ஏற்ற விதமான அணுகுமுறையின் மதிப்புகள் மற்றும் கொள்கைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள் மற்றும் அதனை மற்றவர்களும் புரிந்து கொள்ள உதவுகிறார்கள்; அவரவர் வயதுக்கு ஏற்ற சூழல்களை உருவாக்க உறுதியளிக்கிறார்கள் மற்றும் நெட்வொர்க்கில் தீவிரமாக பங்கேற்க ஒப்புக்கொள்கிறார்கள்.

இந்த முதியோர்களுக்கான ஆதாரவளக் கோர்வைப் புத்தகம், சமூகப் பங்கேற்பை ஊக்குவித்தல், சமூகத் தனிமைப்படுத்தலை இனம் கண்டு, அதற்கான தகவல் மற்றும் தகவல்தொடர்புக்கான ஆதாரங்களை வழங்குவதன் மூலம் ப்ராம்ப்ட்ட னின் மூத்த குடிமக்களுக்கு ஆதரவளிக்க உதவுகிறது,

ப்ராம்ப்ட்டனின் வயதுக்கு ஏற்றவிதமான யுக்தி மற்றும் செயல் திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள அனைத்து பொருட்கள் பற்றிய விபரங்களும் வழங்கப்படுகின்றன.  ஆதாரவள கோர்வைப் புத்தகத்தை பலன் தரும்விதமாக ஆக்குவதற்கு துணையாக, கனடா அரசாங்கத்தின் மூத்தகுடிமக்களுக்கான நியூ ஹொரைசன்ஸ் திட்டத்திலிருந்து $20,575 தொகையை மானிய நிதியாக ப்ராம்ப்ட்ட ன் நகரம் பெற்றது.

கோவிட்-19 தொற்றுநோயிலிருந்து சமூகம் மெல்ல மெல்ல மீண்டு வருவதால், இந்தப் புதிய மூத்த குடிமக்களுக்கான ஆதாரவளக் கோர்வைப் புத்தகமானது, கிடைக்கக்கூடிய ஆதரவுச் சேவைகள் மற்றும் முக்கிய சமூகத் தொடுப்புள்ளிகள் பற்றிய தகவல்களை அணுகுவதற்கு வழி வகுக்கும். மூத்தகுடி மக்களுக்கான ஆதாரவளக் கோர்வைப்புத்தகம் பற்றிய கூடுதல் தகவலுக்கு, brampton.calagefriendly ஐப் பார்வையிடவும்.

கோர்வைப் புத்தகத்தில் காணப்படும் எந்த தகவலையும் மாற்று வடிவத்தில் வேண்டுகிற குடியிருப்பாளர்கள், agefriendly@brampton.caக்கு மின்ன ஞ்சல் அனுப்பலாம்.

அறிஞர் கூற்றுக்கள்

“2006 ஆம் ஆண்டில், ப்ராம்ப்ட்ட னில் 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சுமார் 34,000 பேர் வசித்து வந்தனர். அந்த எண்ணிக்கையானது, 2016 ஆம் ஆண்டில், 66,000 ஆக அதிகரித்தது. ப்ராம்ப்ட்ட னில் பிரமிக்கச் செய்யும் வகையிலான முதியவர்கள் நம்மிடையே உள்ளனர், அவர்களின் பங்களிப்புகள் நமது நகரத்தை தொடர்ந்து வலுப்படுத்துகின்றன. ப்ராம்ப்ட்ட ன் நகரம் சமூகத்துடன் ஈடுபாடு கொள்வதற்கும் நமது மூத்தகுடி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது.

முதியோர்களுக்கான இந்த புதிய ஆதாரவளக் கோர்வைப் புத்தகம், நமது வயதான மக்களுக்கு முக்கிய இணைப்புகளை உருவாக்கவும், செழிப்பாக வாழவும் தேவையான கருவிகளை வழங்கும்.”

– பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்ட ன் ஒரு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான நகரமாகும்; இங்கு நமது மூத்தகுடி மக்கள் பெரிதும் மதிக்கப்படுகிறார்கள், ஆதரவளிக்கப்படுகிறார்கள் மற்றும் சமூகத்தில் செயல்பாடு கொண்ட பங்கு வகிக்கிறார்கள். மிகப் பரவலான சமூக ஈடுபாட்டின் மூலம், அனைவருக்கும் சிறந்த ப்ராம்ப்ட்ட னை அவர்கள் தொடர்ந்து உருவாக்கி வருவதால், எங்கள் மூத்தகுடிமக்களாகிய அவர்களுக்கு ப்ராம்ப்ட்ட ன் சார்ந்த தகவல்களை வழங்க இந்தப் புதிய மூத்தகுடிமக்களுக்கான ஆதாரவளக் கோர்வைப் புத்தகத்தை உருவாக்கியுள்ளோம்.”

மார்ட்டின் மெடெய்ரோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 3 &4; தலைவர், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத்துறை, ப்ராம்ப்ட்டன் நகரம்

“2006 மற்றும் 2016 ஆண்டுகளுக்கு இடையில், ப்ராம்ப்ட்ட ன் நகர மூத்தகுடிமக்களின் மக்கள் தொகையானது 196 சதவீதம் வளர்ந்துள்ளது மற்றும் இந்த அதிகரிப்பு தொடர்கிறது. ப்ராம்ப்ட்ட ன் நகரம் அந்தந்த வயதுக்கு ஏற்றவர்களுக்கான நகரத்தை உருவாக்குவதற்கும், நமது வயதான மக்கள் தங்கள் முதிர் வயது காலத்தில் செழிப்புடனும் இருக்கத் தேவையான கருவிகள் மற்றும் வளங்களை வழங்குவதற்கும் உறுதிபூண்டுள்ளது.

– பால் மோர்ரிஸன், இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்ட ன் நகரம்

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். Twitter, Facebook, மற்றும் Instagram ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்து கொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு
ப்ராம்ப்ட்ட ன் நகர பன்முக கலாச்சார ஊடகம்
multiculturalmedia@brampton.ca

 

City of Brampton introduces a new online directory to support seniors

BRAMPTON, ON (April 21, 2022) – The City of Brampton has launched a new online resource to help further Brampton’s age-friendly vision and strengthen community connections. The new seniors’ resource directory is an online tool to help increase access to resources and services for seniors and caregivers.

Some of the resources available in the directory include:

Home and social supports
Transportation
Health and wellbeing
Financial and accessibility supports
Mental health
Newcomer supports

In March 2021, the City of Brampton became a member of the World Health Organization’s (WHO) Global Network for Age-friendly Cities and Communities. Members of the network share and promote the values and principles of the WHOs age-friendly approach, commit to creating age-friendly environments and agree to participate actively in the network.

The seniors’ resource directory helps support Brampton’s aging population by encouraging social participation, recognizing social isolation and providing resources for information and communication, all items outlined in Brampton’s Age-Friendly Strategy and Action Plan.

The City of Brampton received $20,575 in grant funding from the Government of Canada’s New Horizons for Seniors program to support bringing the directory to fruition.

The new seniors’ resource directory will provide easy to access information on available support services and key community touchpoints, helping to rebuild connections and social engagement opportunities for Brampton seniors as the community continues to recover from the COVID-19 pandemic.

For more information on the seniors’ resource directory, visit brampton.ca/agefriendly

Residents requiring an alternate format for any of the information found in the directory can send an email to agefriendly@brampton.ca