LOADING

Type to search

சினிமா

9 ஆண்டுகளாக எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் திடீரென சுனாமி அலையாய் பொங்கி எழுந்த நடிகர் விக்ரம்

Share

நடிகர் விக்ரமின் தந்தை முன்னாள் ராணுவ வீரர். 7 பிலிம்பேர் விருதுகளைப் பெற்றவர். இவர் நடித்தால் இவரது ரசிகர்கள் படத்தில் ஏதோ ஒரு புதுமையான விஷயம் நடிப்பில் இருக்கும் என்று எண்ணி படம் பார்க்கச் செல்வார்கள். சேது, சாமி, கந்தசாமி, அந்நியன், ஐ போன்ற படங்களே சாட்சி. பிதாமகன், ஐ, அந்நியன் ஆகிய படங்களில் அவரது வெறித்தனமான நடிப்பு தெரியும்.

நடிக்க வந்த புதிதில் 9 ஆண்டுகளாக எந்த வித முன்னேற்றமும் இன்றி சோர்ந்து போய் அப்படியே உட்கார்ந்து விடாமல் திடீரென பொங்கி சுனாமி அலையென வந்து தமிழ்த்திரையுலக வரலாற்றில் அழுத்தமாக ஒரு காலடி எடுத்து வைத்து இன்று வரை முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்தார் நடிகர் விக்ரம். இவரைப் பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம். 1988ல் இவர் தொலைக்காட்சி தொடரில் தான் நடித்து வந்தார். அதுவும் கே.பாலசந்தரின் கலாட்ட குடும்பம் என்ற தொடரில் தொடர்ந்து 1990ல் தான் இவரது முதல் படம் வெளியானது. படத்தின் பெயர் என் காதல் கண்மணி. அதன்பிறகு 9 ஆண்டுகள் இவருக்கு எந்த முன்னேற்றமும் கிடைக்கவில்லை. அப்போது வெளியான படம் சேது. இவரது திரையுலக வாழ்க்கையைப் புரட்டி போட்டது. அன்று முதல் இவருக்கு வெற்றி மயம்தான். சிறந்த நடிகர்களில் ஒருவர் ச்சீயான் விக்ரம்.

3 வருடங்கள் ஆகி விட்டது. கொரோனா தான் எல்லோரையும் உட்கார வைத்து விட்டது. தற்போது தான் மகான் திரைக்கு வர உள்ளது. மகான் படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரமும் நடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்தப்படம் ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.மகான் முன்னோட்டக் காட்சி வந்ததுக்கு அத்தனை ரியாக்ஷன்…ரசிகர்கள் அன்பு என்றைக்குமே குறையல. தமிழ்ல நான் பிரபுதேவா, அப்பாஸ், வினித்துக்கு எல்லோருக்கும் டப்பிங் பண்ணிருக்கேன். எனக்கு தியேட்டர்ல ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்க்க வேண்டும் என்று எப்பவுமே ஒரு ஆர்வம் இருக்கும். அப்போ ஒரு எனர்ஜி வரும். அந்நியன் படம் நல்லா போனது. சப் டைட்டில் எல்லாம் பார்க்குறாங்க.

உலக அளவில் எல்லாருமே இப்போ மற்ற மொழிப்படங்களையும் பார்ப்பதில் ஆர்வம் காட்டி வாராங்க. ச்சீயான் விக்ரமுக்கு இது 60வது படம். இந்தப்படத்திற்காக ஒவ்வொரு தடவையும் மேக் அப் பண்ண 3 மணி நேரம் ஆனது. வெகுளித்தனமான ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் எனக்கு கார் ஓட்டுவது ரொம்பவே பிடிக்கும். துருவ் கிட்ட எப்போதும் குற்றம் கண்டுபிடிச்சு கத்துக்கொடுத்துக்கிட்டு இருப்பேன். ஆதித்யா வர்மா படத்துக்கு அவனுக்கு நடிப்பை சொல்லிக்கொடுத்தத விட நீ வந்து இப்படி தான் பிஹேவ் பண்ணனும். இவங்கள மீட் பண்ணும்போது இப்படி இருக்கணும். நீ வந்து எல்லாருக்கிட்டயும் ப்ரீயா இருக்கணும்.

எப்பவுமே அவங்க வந்து உன்னை நேசிச்சி வாராங்க. இது மாதரி சின்ன சின்ன விஷயங்களை வலியுறுத்துவேன். கிட்ட வரும்போது அதே பக்குவம், ஒரு பேலன்ஸோட இருக்கணும்னு சொல்வேன். பொண்ணும் நானும் ரொம்ப வித்தியாசமாக இருப்போம். பொண்ண வந்து அவ்ளோ நேசிக்கிறேன். துருவ் விக்ரம் அறிமுகமான படம் ஆதித்யா வர்மா என்பது குறிப்பிடத்தக்கது. இது 2019ல் வெளியானது. விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.