துணுக்காய் பாலிநகர் மகா வித்தியாலயத்தில் நவீன கற்றல் கற்பித்தலுக்கான பிரவேச நிகழ்வு
Share
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலயத்திற்குற்பட்ட பாலிநகர் மகா வித்தியாலயத்தில் நவீன கற்றல் கற்பித்தலுக்கான பிரவேச நிகழ்வு இன்று இடம்பெற்றிருந்தது
பாலிநகர் மக வித்தியாலயத்தின் அதிபர் திரு ஸ்ரீ கமலநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அதிதிகள் வரவேற்பு நிகழ்வும் , நவீன கற்றல் கற்பித்தலுக்கான திறப்புவிழாவும் இடம்பெற்றிருந்தன

நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் மாகாண செயலாளர் வரதீஸ்வரன்,மாகாண கல்வி பணிப்பாளர் திரு உதயகுமார் , துணுக்காய் வலயக்கல்வி பணிப்பாளர் மாலினி முகுந்தன்,மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர்கள், வலயக்கல்வி பணிப்பாளர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்
நிகழ்வில் அயர் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்
ஜெகதீஸ்வரன் டிஷாந்த்













