LOADING

Type to search

இலங்கை அரசியல்

வியாபார நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர் மல்லாவி வர்த்தகர்கள்

Share

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான மல்லாவி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்று செல்வதற்காக தரித்து நிற்கும் வாகனங்கள் தமது கடை வீதி வாயில்களை மூடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தமது வியாபார நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக வர்த்தகர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்

மல்லாவி வர்த்தக சங்கம் ஊடாக துணுக்காய் பிரதேச செயலாளர் மற்றும் மல்லாவி போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு கூட்டாக வர்த்தகர்களால் அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை கடிதத்திலேயே தமது வியாபார நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்

கடை வாயில்களில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களினால் வர்த்தகர்களாகிய தாமும் , வாடிக்கையாளர்களும் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தே குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது

ஜெகதீஸ்வரன்- டிஷாந்த்