LOADING

Type to search

கனடா அரசியல்

பிரம்ரன் நகரசபைக்கு தேர்ந்தெடுக்கப்படக் கூடிய பிராந்திய வேட்பாளரான (Regional Councilor- Ward 7 & 8) சிந்தியா ஸ்ரீ பிரகாஸ் (Cynthia Sri Pragash) அவர்களுக்கு உங்கள் வாக்கை அளியுங்கள்

Share

பிரம்ரன் நகரசபையின் 7ம் 8ம் வட்டாரங்களுக்கான பிராந்திய கவுன்சிலருக்கான தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ள இளைய தலைமுறை வேட்பாளரான சிந்தியா ஸ்ரீ பிரகாஸ் அவர்கள் பூக்களின் நகரம் என வர்ணிக்கப்பெறுகின்ற பிரம்ரன் நகரத்தின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்து வருகின்றார்.

தனது கணவரோடும் இரண்டு பிள்ளைகளோடும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரும் இவர் தனது 11வது வயதில் கனடாவில் குடியேறியவராவர். இவருக்கு சிறுவயதிலிருந்தே சமூகத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு வாழ்வதே விருப்பமான ஒன்றாகத் தோன்றியது. ஆதனால் தொண்டராக பல நிறுவனங்களில் பணியாற்றத் தொடங்கினார்.

பின்னர் தகவல் தொழில்நுட்பத்துறையில் பட்டம் பெற்ற சிந்தியா. பல பதவிகளை வகித்து பாராட்டுக்களைப் பெற்றவர். தான் சார்ந்த சமூகத்திற்கு சேவையாற்றும் வகையில் தற்போது. பிரம்ரன் நகரசபையின் பிராந்திய கவுன்சிலர் பதவி ஒன்றுக்கு வேட்பாளராக தன்னை நிறுத்தியுள்ளார்.

தான் பிராந்திய கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பெற்றால். பல முக்கிய தேவைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக அயராது பாடுபடுவேன் என்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரம்ரன் நகரசபையின் 7ம் 8ம் வட்டாரங்களில் உள்ள மக்களுக்கான பூங்காக்களை மேம்படுத்துதல் மற்றும் சமூகங்கள் சார்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தி பயனுள்ள வகையில் தங்கள் ஓய்வு நேரங்களில் ஈடுபடும் வகையில் பணியாற்றவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரம்ரன் வாழ் மக்களுக்கு சேவையாற்றக் கூடிய வேட்பாளரான சிந்தியா ஸ்ரீ பிரகாஸ் (Cynthia Sri Pragash- Ward 7-8 Brampton Municipal Council) அவர்களுக்கு உங்கள் வாக்கை அளியுங்கள்