LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் 6 பேருக்கு ‘செய்திச் செம்மல்’ கௌரவ விருது வழங்கி கௌரவம்

Share

மன்னார் மாவட்ட செயலகமும்,மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் ‘மன்னெழில் -11’ மலர் வெளியீடு, 2022ம் ஆண்டுக்கான கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும் புதன்கிழமை(16ம் திகதி) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் மன்னார் மாவட்ட கலை ,பண்பாட்டுப் பேரவை யின் தலைவருமான திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது மன்னார் மாவட்டத்தின் கலை,பண்பாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு ஊடகத்துறை மூலமாக தமது அர்ப்பணிப்பு மிக்க பங்களிப்பை வழங்கி வரும் மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் 6 பேருக்கு ‘செய்திச் செம்மல்’ என்னும் கௌரவ விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இவர்களுள் ஊடகவியலாளர் றொசாரியன் லம்பேர்ட் அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது