LOADING

Type to search

உலக அரசியல்

வட கொரியாவின் அடுத்த தலைமுறை அதிகாரத்தை உறுதி செய்யும் வகையில் கிம் ஜொங் உன்னின் மகள் பொதுவெளியில் தோன்றினார்

Share

வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன்னுக்கு மகள் ஒருவர் இருப்பது பற்றி நீண்ட காலமாக ஊகங்கள் வெளியான நிலையில் அவர் தனது மகளுடன் முதல் முறை பொதுவெளியில் தோன்றியுள்ளார்.

கிம் சு ஏ என்ற பெயர் கொண்டவர் என்று நம்பப்படும் அவரது மகள் கடந்த வெள்ளிக்கிழமை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை தனது தந்தையுடன் இணைந்து பார்வையிடும் படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஏவுகணை சோதனையின்போது தந்தையும் மகளும் கைகோர்த்த வண்ணம் தோன்றுகின்றனர். இந்த ஏவுகணைக்கு அமெரிக்கா கண்டனத்தை வெளியிட்டுள்ளது. உலகின் மிகவும் ரகசியங்கள் பொதிந்த நாட்டின் தலைவராக கிம் இருப்பதோடு, அவரது தனிப்பட்ட வாழ்வு பற்றி வெளி உலகுக்கு அதிகம் தெரியாதுள்ளது.

கிம்மின் மகளுக்கு 12, 13 வயது இருக்கக் கூடும் என்று நம்பப்படுவதோடு வட கொரியாவின் அடுத்த தலைமுறை அதிகார வரிசையை உறுதி செய்வதாக இது உள்ளது.