LOADING

Type to search

கனடா அரசியல்

IN SCARBOROUGH, CANADA, IN CELEBRATION OF QUEEN ELIZABETH II’s PLATINUM JUBILEE A COMMEMORATIVE PINS AND THE AWARDS WERE PRESEMTED TO RECIPIENTS BY SALMA ZAHID, THE CURRENT MEMBER OF PARLIAMENT FOR SCARBOROUGH CENTRE.

Share

The Editor in Chief of Canada Uthayan Logendralingam and Mr. Shankar Nallathamby, who is a Successful Businessman among Tamil Canadians and few Tamil Canadians were honoured with Pins and Awards by M.P SaLMA Zahid.

ஸ்காபுறோ மத்திய தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சல்மா சாஹிட் ஏற்பாடு செய்த கனடா அரச வைபவம்

கனடா ஸ்காபுறோ நகரில் இடம்பெற்ற அரச வைபவம் ஒன்றை ஸ்காபுறோ மத்திய தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சல்மா சாஹிட் ஏற்பாடு செய்திருந்தார்.

பல தமிழ் கனடியர்கள் மற்றும் ஏனைய பல இனங்களைச் சேர்ந்த சேவையாளர்கள் ஆகியோருக்கு இங்கிலாந்தின் இரண்டாம் எலிசெபெத் மகாராணியின் 70 ஆண்டு சேவையைக் கொண்டாடும் முகமாக தயாரிக்கப் பெற்ற கௌரவப் பதக்கம் மற்றும் விருது ஆகியன இன்றைய விழாவில் வழங்கப்பெற்றன.

கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் மற்றும் வர்த்தகப் பிரமுகர் சங்கர் நல்லதம்பி ஆகியோர் அடங்கலாக பல தமிழ்க் கனடியர்கள் மற்றும் பல்லினங1;களைச் சேர்ந்த சேவையாளர்களுக்கு மேற்படி விருதுகள் வழங்கப்பெற்றன.

மேற்படி விருதுகளை வழங்கி அங்கு உரையாற்றிய ஸ்காபுறோ மத்திய தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சல்மா சாஹிட் ” கனடிய தேசமானது உலகெங்கும் பல நாடுகளில் பிறந்த இலட்சக் கணக்கானவர்களுக்கு தன் மண்ணில் குடியேறி வாழ்க்கையில் உயர்ந்திட வழிசெய்திட்டதோடு இவ்வாறான உயர் கௌரவங்களை வழங்கி வருவதற்கும் நாம் அனைவரும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்” என்றார்

செய்தியும் படங்களும்:சங்கர் சிவநாதன்- ரூபம் செய்தித் தளம்