LOADING

Type to search

இலங்கை அரசியல்

வாழைச்சேனை மியான்குளம் பகுதியில் யானை தாக்கியதில் உயிரிழந்த முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு

Share

(07-12-2022)

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மியான்குளம் பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்கிய உயிரிழந்த நிலையில் முதியவர் ஒருவர் சடலமாக இன்று புதன்கிழமை (07) மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை- பொலன்னறுவை பிரதான வீதியிலுள்ள மியான் குளம் காட்டுப்பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் சடலம் ஒன்று இருப்பதாக அந்த பகுதியில் மாடு மேய்ப்பதற்கு சென்றவர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் சடலத்தை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த வயோதிபர் அடையாளம் காணப்படவில்லை.

மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.