LOADING

Type to search

கனடா அரசியல்

HomeLife/GTA Realty Inc. hosts its Annual Award Gala 2023

Share

HomeLife/GTA Realty Inc வீடு விற்பனை முகவர் நிறுவனம் நடத்திய வருடாந்த விற்;பனை விருது வழங்கும் விழா

திருவாளர்கள் ராஜா மகேந்திரன் மற்றும் Eddi Woo ஆகியோரை நிர்வாகப் பங்காளிகளாகக் கொண HomeLife/GTA Realty Inc வீடு விற்பனை முகவர் நிறுவனம் நடத்திய வருடாந்த விற்;பனை விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் புதன்கிழமையன்று ஸ்காபுறோவில் உள்ள மார்க்கம் கொன்வென்சன் விழா மண்டபத்தில் சிறப்பாக நடத்தியது.

சிறப்பு விருந்தினராக எமது பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் கலந்து கொண்டு விற்பனை விருதுகள் பெற்ற சில முகவர்களுக்கு விருதுகளை வழங்கிக் கௌரவித்தார்.
நிர்வாகப் பங்களாளர்களான ராஜா மகேந்திரன் மற்றும் Eddi Woo ஆகிய இருவரும் அறிமுக உரையாற்றினார்கள். தங்கள் முகவர் நிறுவனத்தின் கடந்த கால மற்றும் தற்போதைய வளர்ச்சி தொடர்பாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

இவ்வருடத்திற்குரிய அதி உயர் விற்பனை விருதினை தட்டிக் கொண்ட திரு ரதீஸ் சுப்பிரமணியத்திற்கு நிர்வாகப் பங்களாளர்களான ராஜா மகேந்திரன் மற்றும் Eddi Woo ஆகிய இருவரும் விருதினை வழங்கியபோது சபையில் அமர்ந்திருந்த அனைவரும் கரகோசம் செய்து அவருக்கு தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்கள்.