LOADING

Type to search

சினிமா

மயக்கம் என்ன இரண்டாம் பாகம்? செல்வராகவன் அளித்த பதில்

Share

நானே வருவேன் வெற்றிக்கு பிறகு ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்துக்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் செல்வராகவன். இதற்கிடையே நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். மோகன்ஜி இயக்கத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பகாசூரன் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது.

இதையடுத்து பிரபல ஊடகத்துக்கு பேட்டியளித்த இயக்குநர் செல்வராகவனிடம் அவரது படங்கள், நடிகனாக மாறியது, தனுஷ் பற்றி என பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அனைத்துக்கும் சுவாரஸ்யமாக பதில் அளித்தார்.

இதைத்தொடர்ந்து செல்வராகவன் – தனுஷ் காம்போவில் 2011இல் வெளியாகி சூப்பர் ஹிட்டான மயக்கம் என்ன படம் இரண்டாம் பாகம் உருவானால், படத்தின் கதை எப்படி அமையும் என ரசிகர்கள் பலரும் கேட்டிருப்பதாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு இயக்குநர் செல்வராகவன் பதில் கூறியதாவது:

மயக்கம் என்ன கார்த்திக் என் கண்ணில் தென்பட்டால் முழுமையாக சொல்கிறேன். அந்த படத்திலுள்ள கார்த்திக் – யாமினி ஆகிய இருவருக்கும் மிகவும் பக்குவம் அடைந்தவர்கள்.

இப்போ அவர்கள் குழந்தைகளுடன் நல்ல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். எனவே அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்.

மிக முக்கியமாக மயக்கம் என்ன இரண்டாம் பாகம் உருவாகும்” என்று தனது எண்ணத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, நானே வருவேன் என 5 படங்கள் வெளிவந்துள்ளன. இதில் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட செல்வராகவன் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து தற்போது மயக்கம் என்ன இரண்டாம் பாகம் குறித்து கேள்விக்கும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் பாஸிடிவான பதிலை அளித்துள்ளார்.

கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் தனுஷ், ஏற்கனேவே வெற்றிமாறனின் வட சென்னை இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை எதிர்நோக்கியுள்ளார். அத்துடன் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.