அதிமுக பொதுக்குழு வழக்கு: ஜூன் 12-ந்தேதி ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
Share
அதிமுக பொதுக்குழு வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களையும், பொதுச் செயலாளர் தேர்தலையும் எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஒரு மாத இடைவெளிக்கு பின் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், “கட்சி விதிப்படி, கட்சி விவகாரங்கள் தொடர்பாக பொதுக்குழு எடுக்கும் முடிவுகளே இறுதியானது.
இந்த நிலையில் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் மீண்டும் விசாரணை தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதத்தை தொடங்கினார். கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கட்சி விதியை எம்.ஜி.ஆர் வகுத்தார். அந்த விதி நான்கு ஆண்டுகள் தவிர்த்து இதுவரை அமலில் உள்ளது என்று அவர் கூறினார். இதையடுத்து வழக்கை வருகிற ஜூன் 12-ந்தேதி திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.










