ரஜினியைச் சந்தித்த ஆஸ்திரேலிய துணை தூதர் – ஜெயிலர் படத்துக்கு வாழ்த்து
Share
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், சுனில், தமன்னா, யோகி பாபு என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துவருகின்றனர்.
இதனையடுத்து தற்போது தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிவரும் லால் சலாம் படத்தில் ரஜினி நடித்துவருகிறார். இதனையடுத்து ஜெய்பீம் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சனும் ரஜினிக்கு இணையான வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய துணை தூதர் பேர்ரி ஓ ஃபேரல் நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட படங்களை பகிர்ந்த அவர், சினிமா, கலாச்சாரங்களை இணைப்பதுடன் நாடுகளுக்கு இடையே நட்பை இணைக்கிறது. பிரபல நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்தில் மகிழ்ச்சி. அவரது ஜெயிலர் படத்துக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.













