LOADING

Type to search

இந்திய அரசியல்

தமிழக சுகாதாரத்துறை அமைச்சருடன் கனடா உதயன் நண்பர்கள் நடத்திய ஒரு சந்திப்பு

Share

கனடா உதயன் வார இதழில் டாக்டர் வே. சங்கரநாராயணன் தொடராக எழுதிய பயணக் கட்டுரைகளின் நூலாக்கம் ” பனி பொழியும் தேசத்தில் பத்து நாட்கள்” என்ற நூலாக கனடாவில் ரொறன்ரோ மற்றும் மொன்றியால் நகரங்களில் அண்மையில் வெளியிடப்பட்டது. அந்த நூலின் பிரதியையும் மற்றும் கனடா உதயன் வார இதழின் பிரதிகளையும் டாக்டர் வே.சங்கரநாராயணன், கனடா உதயன் சென்னை நிருபர் திரு.அருண் ஆகியோர் நேற்று (13.6.2023) தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு. திரு. மா. சுப்பிரமணியம் அவர்களிடம் வழங்கினர்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சரின் இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. டாக்டர் வே.சங்கரநாராயணனுக்கு வாழ்த்துக்களையும், கனடா உதயன் வார இதழுக்குத் தன் பாராட்டுக்களையும் அமைச்சர் தெரிவித்துக் கொண்டார். கனடா உதயன் பிரதம ஆசிரியருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கும்படியும் அமைச்சர் தன்னைச் சந்தித்தவர்களிடம் வேண்டிக்கொண்டார்.