LOADING

Type to search

இலங்கை அரசியல்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு தொடர்பில் நீதிமன்றத்தின் அறிவிப்பு

Share

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபடும் போது அதற்கான பாதீட்டை தாக்கல் செய்யுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (20) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நீதிபதி ரி. பிரதீபன் முன்னிலையில் இது தொடர்பான வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சட்டவைத்திய அதிகாரி வாசுதேவவினால் புதைகுழி அகழ்வுக்கான செலவு குறித்த உத்தேச பாதீடு தாக்கல்செய்யப்பட்டது.

அகழ்வு பணியை மேற்கொள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் புஷ்பரட்னத்துடன், ராஜ் சோமுதேவா ஆகியோரை நீதிமன்றம் அழைத்துள்ளது.

இதேவேளை, தொல்பொருள் திணைக்களம் இன்று நீதிமன்றில் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.