LOADING

Type to search

இலங்கை அரசியல்

வாகன விபத்தில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவன் பலி!

Share

தென்மராட்சி சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 பிரதான வீதி, கைதடி நுணாவில் வைரவ கோவிலடியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.

இன்று முற்பகல் 11 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாட்டு வண்டி சவாரி போட்டிக்காக வண்டில் மற்றும் மாடுகளை ஏற்றிச்சென்ற கனரக லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் கண்டுவில் வீதி சாவகச்சேரியை சேர்ந்த 19 வயதான சிவபாலன் பிரவீன் என்ற மாணவனே விபத்து சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவரின் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.