LOADING

Type to search

இலங்கை அரசியல்

அனைவரும் வந்து தியாக தீபத்தின் நினைவேந்தலை அனுஷ்டியுங்கள் – ஜனநாயக போராளிகள் கட்சி

Share

பு.கஜிந்தன்

தியாக தீபம் திலீபனின் நினைவு தின அனுஷ்டிப்பு நிகழ்வுகள் அரசியல் கட்சிகள் பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைக்கப் பட்டு முன்னெடுக்கப்படும் என ஜனாநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.

தியாகி திலீபனின் நினைவுதினத்தில் கடந்தகாலத்தில் பல்வேறுபட்ட குழப்பநிலை கள் மற்றும் முகம் சுழிக்கும் வகையான செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் அவற்றை தவிர்க்கும் முகமாக ஒரு அரசியல் கட்சியோ, பொது அமைப்போ தனிப்பட்ட முறையில் நினைவுதினத்தை அனுஷ்டிப்பதை தவிர்த்து, அனைத்து தரப்பி னர்களையும் ஒன்றிணைத்து நினைவேந்தல் நிகழ்வினை உணர்வுபூர்வமாக நடத்தப்படுவதையே பொது மக்களும் நாமும் விரும்புகிறோம்.

இவ்வாறான நிலையில் எமது கட்சியின் தலைமையின் கீழ் அரசியல்கட்சிகள் பொது அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு நினைவுதின அனுஷ்டிப்பை சிறந்த முறையில் ஒன்றிணைக்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதுகுறித்து நாம் பல்வேறுதரப்புடன் பேசியிருக்கிறோம் என்றார்.