LOADING

Type to search

இந்திய அரசியல்

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் அரசு பேருந்து மோதி பள்ளி மாணவர் பலியான சோகம்!

Share

அரசு பேருந்து மோதிய விபத்தில் நான்காம் வகுப்பு பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் சாலையை கடக்க முயன்றபோது அரசு பேருந்து மோதியதில் 4ஆம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். கல்பாக்கம் அணுசக்தி ஊழியர்கள் குடியிருப்பை சேர்ந்த சுஜாதா என்பவரின் மகன் ஷரவன். இவர் அணுசக்தி மத்திய பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் சுதந்திர நாள் நிகழ்ச்சியையொட்டி சைக்கிளில் பள்ளிக்கு சென்ற மாணவன் விழா முடிந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த அரசு பேருந்து மோதி மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அப்பகுதியில் வந்த சகமாணவர்களின் பெற்றோர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கல்பாக்கம் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து கல்பாக்கம் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.