LOADING

Type to search

இந்திய அரசியல்

கேந்திர வித்யாலயா பள்ளியில் மாணவிகளை அடித்து துன்புறுத்தியதாக புகார்… ஆந்திராவில் அதிர்ச்சி!

Share

ஆந்திராவில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவிகளை அடித்து துன்புறுத்தியதாக நூலகர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் மத்திய கல்வி நிறுவனமான கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. அங்கு, பானு பிரகாஷ் என்பவர் நூலகராக பணியாற்றி வருகிறார். பள்ளி மாணவிகளை காரணம் இல்லாமல் பானு பிரகாஷ் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. அவரால் பெரிதும் பாதிக்கப்பட்டதாக மாணவிகள் சிலர், தங்களது பெற்றோரிடம் தெரியப்படுத்தி உள்ளனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து முறையிட்டனர். ஆனால் தலைமை ஆசிரியர் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் புகாரை அவமதித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒரே நேரத்தில் பள்ளிக்கு வந்த மாணவிகள் பலரின் பெற்றோர், தலைமை ஆசிரியரிடம் நீதி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வரவழைக்கப்பட்ட நூலகர் பானு பிரகாஷ், பெற்றோர்களுக்கு முறையாக பதிலளிக்காமல் அலைக்கழித்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், நூலகர் பானு பிரகாஷ் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தான் மாணவிகளை துன்புறுத்தவில்லை என்று நூலகர் பானு பிரகாஷ் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என தெரிகிறது. காவல்தறை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினால் மட்டுமே நூலகர் மீது தவறு உண்டா? இல்லையா என்பது குறித்து தெரியவரும்.