LOADING

Type to search

சினிமா

இந்திய குடியுரிமை பெற்ற நடிகர் அக்ஷய்குமார்

Share

தமிழில் ‘2.0’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் அக்ஷய்குமாருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக இந்திய திரைத்துறையில் முன்னணி நடிகராக இருந்து வரும் அக்ஷய் குமார் இந்திய குடியுரிமை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். 55 வயதாகும் அக்ஷய் குமார் கனடா நாட்டு குடியுரிமையுடன் இதுவரை நடித்து வந்தார். இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது கீச்சக பக்கத்தில் தனக்கு இந்திய குடியுரிமை கிடைத்துவிட்டதாக அறிவித்துள்ளார். அதற்கான பதிவை பகிர்ந்துள்ள அவர் சுதந்திர தின வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.