தமிழ்நாடு தேர்வாணைய தலைவர் நியமனம் – கோப்புகளை திருப்பி அனுப்பிய ஆளுநர்
Share
தமிழ்நாடு தேர்வாணைய தலைவராக ஓய்வுபெற்ற காவல்துறை தலைவர் சைலேந்திர பாபுவை நியமித்து தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டின் அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை தமிழ்நாடு தேர்வாணையம் எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நியமனம் செய்து வருகிறது. தமிழ்நாடு தேர்வாணைய அமைப்பில் தலைவர் மற்றும் 10 உறுப்பினர் பதவிகள் பல மாதங்களாக காலியாக இருந்து வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு அரசு தமிழ்நாடு தேர்வாணைய தலைவர் பதவிக்கு ஓய்வு பெற்ற காவல்துறை தலைவர் சைலேந்திரபாபுவையும், 10 உறுப்பினர்கள் பதவிகளுக்கான பெயர்களையும் பரிந்துரை செய்து ஆளுநருக்கு பரிந்துரை பட்டியலை அனுப்பியது.
ஆனால், அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி வைத்துள்ளார். தமிழ்நாடு தேர்வாணைய தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு பின்பற்றப்படவில்லை என்று கூறி ஆளுநர் கோப்புகளை திருப்பி அனுப்பியுள்ளதாகக் கூறப்படுக்கிறது.தமிழ்நாடு தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக பின்பற்றப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.













