வெங்கட் பிரபு படத்தில் விஜய்-க்கு ஜோடி பிரியங்கா மோகன்?
Share
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பை தொடர்ந்து லியோ படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வரும் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், லியோ படத்தை தொடர்ந்து “தளபதி 68” என்று அழைக்கப்படும் இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். லியோவை தொடர்ந்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பது உறுதியாகிவிட்ட நிலையில், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரிக்க துவங்கிவிட்டது. இந்த நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படத்தில் விஜய்-க்கு ஜோடியாக பிரியண்கா மோகன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.













