LOADING

Type to search

இந்திய அரசியல்

கன்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து ரூ.1கோடி கஞ்சா கடத்தல்; மதபோதகர் கைது

Share

கன்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து ரூ.1கோடி மதிப்புள்ள கஞ்சா கடத்தியதாக மத போதகர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கயத்தாறு சுங்கச்சாவடி அருகே தனிப்படை உதவி ஆய்வாளர்கள் ரவிக்குமார், ராஜ பிரபு, பிரைடரிக் ராஜன் ஆகியோர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கன்டெய்னர் லாரியை திறந்து சோதனையிட்டபோது அதில் மேற்பகுதியில் ஒரு ரகசிய அறை இருப்பது தெரிய வந்தது.

பின்னர் போலீசார் அந்த அறையை திறந்து சோதனையிட்ட போது 2 கிலோ வீதம் 300 பேக்குகளில் 600 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவுடன் கன்டெய்னர் லாரியை பறிமுதல் செய்து, கோவில்பட்டி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து லாரி ஓட்டுநர் பாண்டிச்சேரி ஏனம் பகுதியைச் சேர்ந்த சத்திபாபு (வயது 39), லாரியில் இருந்த தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த சேகர் மகன் விஜயகுமார் (36), தூத்துக்குடி ஆரோக்கியபுரம், கோயில் பிள்ளை விளையைச் சேர்ந்த பாலச்சந்தர் மகனும் மத போதகருமான ஜான் அற்புத பாரத்(33) ஆகிய 3பேரையும் போலீசார் கைது செய்தனர்.