LOADING

Type to search

இலங்கை அரசியல்

எதிர்வரும் 10 நாட்களுக்குள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மணல் கடத்தல் கால்நடைகள் கடத்தல் கட்டுப்படுத்த கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தரவு

Share

பு.கஜிந்தன்

எதிர்வரும் 10 நாட்களுக்குள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மணல் கடத்தல் கால்நடைகள் கடத்தல் மற்றும் ஏனைய விடயங்களை கட்டுப்படுத்த மாறு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தரவிட்டுள்ளார்

இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண குடா நாட்டில் அண்மைய நாட்களில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் கடத்தல், கால் நடைகள் கடத்தல் ஏனைய சட்டவிரோத சம்பவங்கள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் கடற்தொழில் அமைச்சர் தலைமையில் இடம்பெற்றிருந்த நிலையில் குறித்த கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்

இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபரின் அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதியின் பிரதிநிதி பிரதேச செயலர்கள் பொலிஸ் உயர் அதிகாரிகள் பொது சுகாதார பரிசோதகர்கள் என பலர் கலந்து கொண்டனர்,